மெர்சிடிஸ் பென்ஸ் 25-வது ஆண்டு விழா "லக்ஸ் டிரைவ் லைவ் 2019” : உயர் ரக கார்களை ஓட்டி மகிழ்ந்த பொதுமக்கள்

கோவை : மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா சார்பில் "லக்ஸ் டிரைவ் லைவ் 2019 என்ற நிகழ்ச்சி கோவை செட்டிபாளையம் கரி மோட்டர் ஸ்பீட்வேயில் நடக்கிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உயர் ரக வாகனங்களை ஓட்டி மகிழ்ந்தனர்.

கோவை : மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா சார்பில் "லக்ஸ் டிரைவ் லைவ் 2019 என்ற நிகழ்ச்சி கோவை செட்டிபாளையம் கரி மோட்டர் ஸ்பீட்வேயில் நடக்கிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உயர் ரக வாகனங்களை ஓட்டி மகிழ்ந்தனர்.

இந்த ஆண்டின் துவக்கமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இந்தியாவில் 11 இடங்களில் நடைபெறுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி,செடேன், ஜி.எல்.ஏ., ஜி.எல்.சி., ஜி.எல்.இ. என 43 வகையான கார்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. காரின் தரம் அதன் சிறப்பு அம்சங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள, செங்குத்தான ஓடுபாதை தாழ்வுகளில் ஏ.பி.எஸ் பிரேக்கிங் சிஸ்டத்தில் இயங்கும் போது, அதன் செயல்திறன் விளக்கம் செய்து காட்டபட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பொழுது போக்கிற்கு இசை நிகழ்ச்சி, சமையல் கலைஞர் ரன்வீர் பிரார் உடனான செயல் பயிற்சி என பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.



இது குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்டின் சுவெங் கூறுகையில், “25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது, சந்தையில் தங்களது பிராண்ட் கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடமாக உள்ளது. 6-வது மெட்ரோபோலிடன் நகரமாகவும், மெட்ரோ அல்லாத நகரங்களில் சிறந்த நகராக விளங்குகிறது. இதுவரை நான்கு இடங்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, தற்போது ஐந்தாவது முறையாக நடத்தப்படுகிறது,” எனத் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...